நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்துவரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளிகளாலும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் வெட்டுக்கிளிகள். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மற்றும் உத்திரபிரதேசத்தில் பயிர்களை நாசமாக்கி வருவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் எனப்படும் லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளில் பயிர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சில நிமிடங்களில் ஏக்கர் கணக்கிலான பயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டவை இவை. இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என ஐநா அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பல்லாயிரம் ஹெக்டேர் பயிர்களை காலி செய்த வெட்டுக்கிளிகள் அண்மையில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் புகுந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் பயிர்களை நாசம் செய்துவருகின்றன. இந்நிலையில் தற்போது விவசாயப் பயிர்களை உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேசத்திற்குள்ளும் நுழைந்துள்ளன.
[su_carousel source=”media: 14222,14223″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
இந்த வெட்டுக்கிளிகளால் வடமாநிலங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வெட்டுக்கிளிகளால் 27 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மோசமான தாக்குதல் இப்போது நடந்துள்ளதாக கூறும் வல்லுநர்கள், நாட்டில் மிகப்பெரிய அளவில் உணவு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகளாலும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் வாசிக்க: கொரோனா பாதிப்பால், இந்தாண்டில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில்.. அதிர்ச்சி தகவல்
இதனிடையே வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான் வேளான் துறை ட்ரோன் மூலம் சில பணிகளை ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில வேளான் துறை அதிகாரி ஓம் பிரகாஷ் கூறுகையில், “குறிப்பிட்ட வெட்டுக்கிளிகளின் நகர்வுகள் ஆற்றல்கள் குறித்து வேளான் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் பணிக்காக உபோயோகப்படுத்தப்படும் ட்ரோன்கள் களத்தில் 10 நிமிடம் வரை சத்தம் எழுப்பியபடியே கெமிக்கலை தெளிக்கும். கெமிக்கல் தீர்ந்தவுடன் கெமிக்கல் நிரப்பப்பட்டு மீண்டும் கெமிக்கலை தெளிக்கும் பணியை மேற்கொள்ளும். இப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் மூலம் திறந்தவெளியில் இருக்கும் வெட்டிக்கிகிகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.