திருப்பூரில் காலையில் எழுந்த சப்தம் தேஜஸ் விமானத்தின் சோனிக் பூம் சப்தம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சப்தம் கேட்டது. இந்த சப்தம் பல்லடம், கொடுவாய், முருகம்பாளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த சப்தம் நிலநடுக்கம் என சிலர் வதந்தியை பரப்பினர்.

இதையடுத்து இந்த சப்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், இன்று காலை திருப்பூர் அருகே எழுந்த சப்தம் சூப்பர் சோனிக் தேஜஸ் விமானம் பயணித்ததால் ஏற்பட்டது. மக்கள் யாரும் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். வதந்தியை பரப்பவும் வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார்.

இது திருப்பூர் மாவட்டத்திற்கு புதிதல்ல. இதே போன்றதொரு சப்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி தாராபுரத்தில் 5 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க: பெங்களூர் மக்களை அதிர வைத்த மர்ம சத்தம்.. இதுவா காரணம்..