நாடு முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை (Yellow Fungus) என்ற ஆபத்தான நோய் தொற்று, உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் கடந்தாண்டை விட தீவிரமாக உள்ள நிலையில், புதிதாக கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சைகள் என பல்வேறு தொற்றுகள் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பலருக்கு கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் கண் கீழ்ப்பகுதியில் வலி, மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் பூஞ்சை நோய் தாக்குதல் வெள்ளை, மஞ்சள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. பீகாரில் வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியபட்டது. இது கருப்பு பூஞ்சையை விட அபாயகரமானது எனக் கூறப்படுகிறது.

[su_image_carousel source=”media: 23492,23493″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளை விட ஆபத்தான மஞ்சள் நிற பூஞ்சை நோய், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

சோர்வு, பசியின்மை, எடை இழப்பு மற்றும் நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் ஆகியவை மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் ஆகும். மிகத் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடல் உறுப்புகள் செயலிழப்பது, கண்களைச் சுற்றி கருமை நிறம் ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின்-பி ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக உள்ளது. பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியை தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

சுகாதாரமற்ற நிலை தான் மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்றே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், பூஞ்சை நோய் தாக்குதல் பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்; 45லட்சம் பயனர்களின் தகவல்கள் திருட்டு