மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘செக்க சிவந்த வானம்’ தமிழ்நாட்டில் மட்டும் ரூ.6.82 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று வெளியான இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், படத்தில் அனைத்து ஹீரோக்களுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரசிகர்களும் படத்தை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டரில் மட்டும் ஒரே நாளில் 10,000 டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, 2013ல் வெளியான ‘நியூ வேர்ல்டு’ என்ற கொரியன் படம் பல திரைப்பட விழாவில் பல விருதுகளை பெற்ற படம். இப்படத்தை தழுவி ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் எடுக்கப்பட்டதாக தற்போது விமர்சனங்களும் எழுந்துள்ளது.