தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை பரபரப்பாக நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியும், சரத்குமார் அணியும் இரண்டு அணியாக பிரிந்து போட்டியிட்டஞானர். அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள பலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் இன்னும் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை.

அதில், விஷால் அணிக்குள்ளாக நிறைய பிரச்சனைகளும், அதிருப்தியும் ஏற்பட்ட நிலையில், தற்போது விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தலைவர் பதவி: நாசர்

செயலாளர் பதவி: விஷால்

பொருளாளர் பதவி: கார்த்தி

துணைத்தலைவர்கள் பதவி: கருணாஸ், பூச்சிமுருகன்

செயற்குழு உறுப்பினர்கள் பதவி: ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், குட்டிபத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய்ரத்னம், பிரச்சன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன் மற்றும் காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.