சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகபட்சமாக 120 டாலர் இருந்த போது 74 ரூபாய்க்கு பெட்ரோல் மன்மோகன்சிங் அரசு கொடுத்த நிலையில் இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 80 டாலர் இருக்கும் நிலையில் 90 ரூ வரை இப்போது பெட்ரோல் விற்ப்பதால் பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது என்று அரசு கூறிவருகிறது . ஆனால் சர்வதேச சந்தையில் விலை 35டாலராக குறைந்த போது அந்த பயனை மக்களுக்கு தரமால் பாஜக வின் மோடி அரசு வரியை ஏற்றி விற்றது. இப்போது வரலாறு காணாத வகையில் எகிறும் பெட்ரோல் விலையால் பல இடத்தில் மோடி அரசை மக்கள் வெளிப்படையாக விமர்ச்சிக்க தொடங்கி உள்ளனர் .
இந்த நிலையில் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இதில் , டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக, எண்ணெய் நிறுவனங்களின் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா அமைச்சர், ஆஸ்திரேலிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார். கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3ஆவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
Trackbacks/Pingbacks