கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மையின் சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையில் நடத்திய ஆய்வில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உள்ளது.
 
1972-1973 நிதியாண்டுக்கு பிறகு இதுவே அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இப்போது அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1% ஆக உள்ளது.
 
இதில் ஆண்களில் 6.2% பேரும் பெண்களில் 5.7% பேரும் வேலையில்லாமல் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
 
இதுவே நகர்புறங்களில் வேலையின்மை 7.8% எனவும் கிராமப்புறங்களில் வேலையின்மை 5.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாக, இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின.
 
கடந்த ஜனவரியிலேயே பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு (Business Standard) நாளிதழ் இத்தகவலை வெளியிட்டது. மத்தியில் புதிய அரசு பதவியேற்ற மறுநாளில் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
 
மத்தியப் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முன்பு பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன் வெளியே கசிந்த தகவல்களை வைத்து கூறப்பட்டிருக்கிறது என்கிறது.
 
அதற்குப் பிறகு தான் மோடியின் அரசு அதனை முழுமை செய்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறுகிறது.
 
காங்கிரஸ் அரசின் ஆட்சிகால்த்த்தில் 2011-2012 நிதியாண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது .
 
ஜனவரியில் பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு வெளியிட்ட தகவலுக்கு விளக்கம் தருமாறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
 
இதனிடையே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்துள்து.
 
கடந்த மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் ஜிடிபி 7.2% ஆக சரிந்துள்ளது. முந்தைய காலாண்டு முடிவில் அது 6.8% ஆக இருந்தது.
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 
தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
 
அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.