கரோனா தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாகப் பகிரிந்து விநியோகிப்பதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ள ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
 
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 
கோவாக்ஸ் திட்டத்தில் சீனா அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் சீன அரசும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான சர்வதேச கூட்டணி (கவி) அமைப்பும் கையெழுத்திட்டுள்ளன.
 
அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதிகள் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்ற கோட்ப்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் சீனா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும்.
 
கரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் சரிசமமாக விநியோகிக்கப்படுவதில் சீனா கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சீனாவின் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் வளரும் நாடுகளைவிட வளா்ச்சியடைந்த நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான கருத்து,
 
தற்போதைய நிலையில், கரோனா நோய்த்தொற்றுஉலகின் அனைத்து நாடுகளையும் சோ்ந்த அனைவருக்கும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, எங்களது தடுப்பூசிகள் பாரபட்சமின்றி, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு விநியோகக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
 
அதற்காக, கோவாக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என கூறுயுள்ளார் ஹுவா சன்யிங்.