உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகு சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல இளம் பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு செல்ல விரும்புவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதில் இளம் பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.

தடசேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்எல்ஏ சசியின் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதே போல் பாஜக எம்பி முரளிதரன் வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக குறப்படுகிறது. சபரிமலையில் 2 பெண்கள் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாஜக-வினர் தொடர்ந்து போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.