வேலையின்மை என்ற பெரிய பிரச்சனையை நமது நாடு எதிர்கொண்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது..

அண்மையில் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. இது குறித்து, கருத்துத் தெரிவித்த கட்கரி, வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும் தலைமை பதவியில் இருப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னதாக இவர் கூறியதும் பெரும் சர்ச்சையை எற்படுத்திய நிலையில் ..

இதனை கட்கரி மறுத்தார். தனது கருத்தை ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் திரித்து கூறுவதாகவும், பிரதமர் மோடி தலைமையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை பாஜக சந்திக்கும். தலைமை பதவி போட்டியில் நான் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், நாகபுரியில் (நாக்பூர்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்ற அவர் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பேசியதாவது:

இப்போது நமது நாட்டில் நமக்கு முன்பு உள்ள, தீர்க்கப்பட வேண்டிய மிகமுக்கியமான பிரச்னை வேலையின்மை. பணிநியமனம் என்பதை அனைவருக்கும் வழங்கிவிட முடியாது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது வேறு, காலியாக உள்ள பணியிடங்களில் ஆள்கள் நியமிப்பது என்பது வேறு.

வேலைவாய்ப்பு உருவாக்கும் என்பது அனைத்து அரசுகளின் முக்கியக் கொள்கையாக உள்ளது. நமது நாட்டில் நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எவ்வாறு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பதை நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும் என்றார்

காங்கிர்ஸ் தலைவர் ராகுல் இன்று வேலைவாய்ப்பு உருவாக்க மோடி தவறிவிட்டார் என்று கூறிய நிலையில் அதே கருத்தை கட்கரியும் பேசியது பரபரப்பை பாஜகவினர் இடையே எற்படுத்தி உள்ளது