மோடி வருகையை மகிழ்ச்சிரகமாக மாற்ற பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தேமுதிக தனது அரசியல் பேரத்தால் அதை காலி செய்து விட்டது. பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளது பாஜக.
 
இன்று சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பலத்தை காட்ட வேண்டும் என்று திட்டத்தில் இருந்தனர். இதில் எப்படியாவது விஜயகாந்த்தை அந்த மேடையில் ஏற்றிவிடுவது என முயற்சி படு வேகமாக எடுக்கப்பட்டது.
 
ஆனால் தேமுதிக அதை சீர்குலைத்து விட்டது. அதிமுக எத்தனையோ இறங்கி வந்தும் கூட விடாப்பிடியாக இருந்து வந்த அந்தக் கட்சி இன்று காலையில்  விட்ட   திமுக தூது  அதிமுக பாஜகவை அதிர வைத்து விட்டது.
 
எனினும் இப்படி விஜயகாந்த் அதிமுக தலைமையை கெஞ்ச வைத்துவிட்டாரே என்று அதிமுக தொண்டர்கள் கடுப்பானார்கள்.
 
இதனால் விழா நடக்கும் வழியெங்கும் வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடிகளை பிடுங்கி போட ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படங்களும் அகற்றப்பட்டன. இதை பார்த்து தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியானதால் பரபரப்பு கூடிவிட்டது.
 
இந்நிலையில்தான் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் என அதிகாரப்பூர்வமாக முடிவானது. இதையடுத்து, கூட்ட மேடையில் உடனடியாக விஜயகாந்த், ஜி.கே.வாசன் படங்கள் வைக்கப்பட்டன. இதை பார்த்ததும்தான் தொண்டர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து “கூல்” ஆனார்கள்.
 
இதில் வாசன் படமும் மேடையில் இடம் பெற்றதால் கூட்டணியும் உறுதியாகிவிடும் என கூறப்பட்டது. அதேசமயம், இப்படி இழுபறி செய்து விட்டு தேமுதகி வருவதால் கூட்டணி பலமாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.
 
 
 
இன்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கிதால், பியூஸ் கோயலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல் வெளியானது.
 
இதனை தொடர்ந்து துரைமுருகனிடம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வருவதாக விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பேசியதாக தகவல் அளித்துள்ளார்.
 
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், கடைசி நேரத்தில் தேமுதிக, திமுகவை நாடியதால் கொடுப்பதற்கு சீட் இல்லை என்று கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
 
நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு செய்த நிலையில் எப்படி சீட் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லை என்றும், தேமுதிகவிற்கு கொடுக்க எங்களிடம் சீட்டும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
 
கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும், அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது என்றும் துரைமுருகன் தகவல் அளித்துள்ளார்.
 
அதிமுக தலைமையை கெஞ்ச வைத்துவிட்டாரே விஜயகாந்த் என்று அந்த கட்சி தொண்டர்களும், கடைசியில் இப்படி காத்திருந்தும் வெறும் 4 தந்துவிட்டார்களே என்று தேமுதிக தொண்டர்களும் வெறுப்பில் இருக்கும் நிலையில் திமுக விடம் இறங்கி போய் தேமுதிக பேசியது கூட்டணியே கிட்டத்தட்ட முறிந்து போய் விட்டதாகவே கருதப்படுகிறது என்கிறார்கள் வேதனையுடம் அதிமுக வினர்