பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று (ஆகஸ்ட் 04) காஷ்மீர் மற்றும் குஜராத்தின் ஜுனகத் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தன் ஜுனாகத் பகுதிகள், பாகிஸ்தானின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய வரைபடத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் இம்ரான்கான், “இன்று, பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை உலகிற்கு முன் அறிமுகப்படுத்துகிறோம்.
பாகிஸ்தானின் வரலாற்றில், இதுவொரு மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த புதிய வரைபடத்தை பாகிஸ்தானின் அமைச்சரவை, எதிர்க்கட்சி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வரைபடம் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்களின் நிறைவேறாத விருப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்த வரைபடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்கிறது (சிறப்பு அந்தஸ்து 370 ஐ ரத்து செய்தல்). இன்று முதல், இது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ்தானின் புதிய வரைபடத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவொரு அரசியல் அபத்தம். நமது யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கிலும், குஜராத்தின் ஜுனாகத்திலும் பாகிஸ்தான் உரிமைகோருவதற்கு எந்தவித அடிப்படைகளும் இல்லை.
ஆனால், இத்தகைய கேலிக்குரிய வலியுறுத்தல்கள் எந்தவித சட்டப்பூர்வ தகுதியையோ அல்லது சர்வதேச அங்கீகாரத்தையோ பெறவில்லை” என்று வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும் வாசிக்க: அக்டோபரில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி… முதல் நாடாக அறிவித்த ரஷ்யா