இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ், கிளார்க் பணியில் இருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் பணியாற்றி வருகிறார் உடுமலை கவுசல்யா.
 
இவர் சமீபத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம்.
 
ஜாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யாவுக்கு அரசு வேலையை அளித்தது .
 
இதன் பின்னர் அவர் அரகோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.