கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ படத்தின் டிரெய்லர்ரை, தமிழில் கார்த்தியும், தெலுங்கில் நடிகர் சூர்யாவும் வெளிட்டுள்ளனர்.

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவ்’. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எல்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் வாங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெயலர் இன்று மாலை வெளியானது. தமிழில் கார்த்தி வெளியிட, தெலுங்கில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். டிரெய்லரில், தனி மனித உரிமைகளையும், சாகசம் நிறைந்த வாழ்க்கை குறித்த படமாக ’தேவ்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல், சாகசம், அதிரடி என தற்காலத்திற்கு ஏற்றார் போல உருவாகியுள்ள தேவ் திரைப்படத்திற்கு “யு” சான்றிதழ் கிடைத்த நிலையில் இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தொிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.