உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடககிறது.இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகையான ‘டைம்’ பத்திரிகை, இந்த வார சர்வதேச பதிப்பில் பிரதமர் மோடியுடன் அட்டைப் படத்துடன் `இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற தலைப்புடன் பிரதான செய்தியையும், அதன் கீழ் 2வதாக `சீர்திருத்தவாதி மோடி’ என்ற தலைப்பில் கட்டுரையும் பிரசுரித்துள்ளது. பிரதான செய்தியை ஆதிஷ் தசீர் என்பவர் எழுதியுள்ளார்.
நியூயார்க் அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகையான `டைம்’ தனது இந்த வார சர்வதேச பதிப்பில் `இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் பிரதமர் நரேந்திர மோடியின் அட்டைப் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எறுபட்டுள்ளது .
இதில், `உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மோடி அரசின் மற்றொரு 5 ஆண்டு கால ஆட்சியை தாங்குமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் கூறிய விவரம் பின்வருமாறு ” கடந்த 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நிலவிய சூழலை மோடி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு மக்களின் நம்பிக்கையாக மாற்றி காட்டினார். ஆனால், 2019ல் மக்கள் தங்களுடைய விரக்திகளில் இருந்து விடுபட்டு வாக்களிக்கும்படி கேட்கிறார்.
அப்போதைய சூழலில் அவர் ஒரு கடவுளாக கருதப்பட்டார். வளமான, ஒளிமயமான எதிர்காலத்தை அளிப்பார் என்றும், இந்துகளின் புத்துணர்ச்சியாகவும் பார்க்கப்பட்டார்.
ஆனால், தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே பார்க்கப்படுகிறார். அதனால்தான் மீண்டும் வாய்ப்பளிக்குமாறு மக்களிடம் கெஞ்சுகிறார்.
கடந்த 2014 தேர்தலில் மக்களிடம் காணப்பட்ட கோபத்தை மோடி பொருளாதார வாக்குறுதிகளாக மாற்றினார். வேலைவாய்ப்பு, வளர்ச்சி குறித்து பேசினார்.
மக்களுக்காக வேலை செய்வதை விட அரசுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? என்று கூறினார். அப்போது அது நம்பிக்கையின் தேர்தலாக காணப்பட்டது.
ஆனால் மோடியின் பொருளாதார திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அது போக, இந்தியாவில் கொடிய மதவாத சூழல் உருவாக மோடி உதவியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்.
இந்தியாவின் மிகப் பழமையான கட்சியான காங்கிரசில், அதன் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா இணைந்ததை தவிர வேறொன்றும் பெரிதாக மாற்றமில்லை.
இந்தியாவில் மிகவும் பலவீனமான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்தது மோடிக்கு வாய்த்த அதிர்ஷ்டம். காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டணி மோடியை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே அமைக்கப்பட்டது. அதை தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறும் அவர் எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் விட்டு வைக்காமல் குறிப்பிட்டுள்ளார்.