கொரானாவை காரணம் காட்டி பிளஸ் 2 தேர்வை இந்த ஆண்டில் தடுத்து நிறுத்திய ஒன்றிய அரசு, நீட் தேர்வுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்ட…

அகில இந்திய அளவில் இந்த ஆண்டு மொத்தம் 16,14,777 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இது கடந்த ஆண்டை விட 1.09 சதவீதம் அதிகமாகும். அவர்களில் 15,44,275 பேர் தேர்வெழுத, அதில் 8,70,074 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஜஸ்ட் 15% அதாவது 108 மார்க் எடுத்து இருந்தாலும் அவர்கள் 8 லட்சத்து சொச்ச ராங்க் என சொல்கிறது National testing agency (NTA ) என்கிற நீட் தேர்வை நடத்தும் மையம்.

சரி 16 லட்சம் பேர் எழுத 8 லட்சம் பேருக்கு ரங்க் கொடுத்துவிட்டார்கள். அதில் படிப்பதற்கு எத்தனை இடம் எத்தனை இருக்கிறது என்று பார்த்தால்..

மருத்துவம் பல் மருத்துவம் என ஆல் இந்தியா அளவில் அனைத்து தனியார் மற்றும் அரசு சீட்டுக்களையும் கூட்டி பெருக்கினால் கூட ஒரு லட்சத்து 20 ஆயிரம் கூட தாண்டாது..

பின்னே எதற்கு 8.6 லட்சம் ரேங்க் பட்டியல் என கேட்கிறீர்களா.. இதன் மூலம் 2021 ஆண்டும் கூட 720 மதிப்பெண்களுக்கு 108 மதிப்பெண்கள் (just15%) பெற்ற மாணவர்.. அவரது பெற்றோர் ஆண்டுக்கு 25 லட்சம் கட்டணம் செலுத்தினால் #MBBS சீட் கிடைக்கும் வசதிக்காக..

ஆக ராங்க் குறைவாக இருந்தாலும்.. அதிகமாக பணம் கொடுத்து ராங்க் லிஸ்டில் பின்னாடி இருப்பவர்கள் பணத்தை அள்ளிக் கொட்டி மருத்துவராகும் வசதி வேறு..

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் 60 ஆயிரம் ரேங்க் இருப்பவர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியாது.. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் கொட்டி தனியார் மருத்துவக்கல்லூரியில் அவரிடம் கட்ட பணம் இல்லை என்றால் அவரால் மருத்துவர் ஆக முடியாது ..

ஆனால் 8 லட்சத்து 50 ஆயிரம் ரேங்க் உள்ளவர் அவரிடம் பணம் இருந்தால் அவர் மருத்துவராகி விடலாம்..
இதனால் அதிகம் பணம் கொடுப்பவர்களுக்கு சீட்டை தாரைவார்த்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஏக குஷி.

அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கட்டிங் வாங்கி ஆளும்கட்சி #பாஜகவும் எக்கச்சக்க குஷி..

தமிழ்நாட்டில் காலம் காலமாக நமது அண்ணா யுனிவர்சிட்டியில் நடத்தும் பொறியாளர் படிப்பு சேர்க்கை அல்லது நீட் வருவதற்கு முன்பு இருந்த மருத்துவர் சேர்க்கை எல்லாம் தமிழ்நாடு அரசே ரேங்க் லிஸ்ட் வெளியீட்டு ஊழல் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்..

ஆனால் நீட்டை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸி தேர்வு நடத்தி ரேங்க் லிஸ்ட் விடுவதோடு தனது பொறுப்பை முடித்துக் கொள்கிறது.. அதன் பின்னர் தனியார் மருத்துவ கல்லூரிகள் வைத்தது தான் சட்டம்..

அதுவும் அவர்கள் தனியாக இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆக இருந்தால் கேட்கவே வேண்டாம்.. மொத்த அட்மிஷனும் மர்மதேசம் தான்..

மருத்துவ சேர்க்கையில் தரமான NEET தரம் இந்த லட்சணத்தில் உள்ளதே என்று வருத்தம் வருகிறதா.. அவலங்கள் இன்னும் முடிவடையவில்லை..

இதிலே இந்த ஆண்டு நாக்பூர் மற்றும் உத்தரப் பிரதேச வட இந்திய மாநிலத்தில் கோச்சிங் சென்டர்களில் அங்கங்கே ஆள்மாறாட்டம் செய்து ஊழல்கள் வேறு.. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமத கூத்தும் நடந்து முடிந்துள்ளது இந்தாண்டில்..

பிளஸ்-2 முடித்த பின்னர் இரண்டு ஆண்டுகள் படித்தவர்கள் முதல் முறை மாணவர்களுடன் போட்டியிடும் அவலம் வேறு எக்ஸ்ட்ரா..

ஒவ்வொரு ஆண்டும் ஓர் சாதி சூழ் டியூஷன் சென்டர்கள் 40 ஆயிரம் கோடிகள் வரை வசூல் செய்யும் அவலம் வேறு எக்ஸ்ட்ரா…

பல கல்வி நிறுவனங்கள் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே டியூசன் என்ற பெயரில் நீட்க்கு 5 லட்சம் வரை டியூஷன் ஃபீஸ் சுரண்டப்படும் அவலம் வேறு எக்ஸ்ட்ரா…

இப்படியாக அகில இந்திய அளவில் ஒரு லட்சம் சீட் மட்டுமே available என்ற நிலையில் ஆண்டுதோறும் சுமார் 16 இலட்சம் மாணவர்கள் பல லட்சங்களை கொடுத்து டியூஷன் படித்து தேர்வை எழுதி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் ஆண்டுதோறும் 15 லட்சம் பேர் ஏமாற #நீட் என்ற பெயரில்..

இதனாலே அனிதாவில் தொடங்கிய அவலம் ஆண்டுதோறும் பல தற்கொலைகள் என தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறது..

மொத்தத்தில் ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டராக பார்க்கவே கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட முறைதான் நீட்..

இவர்கள் அடிக்கும் கூத்தை எல்லாம் பார்த்து ஒன்றிய அரசைப் பார்த்து ஒன்றே ஒன்று கேட்கத் தோன்றுகிறது. கோச்சிங் சென்டர் நீட்டுக்கு இந்தியாவில் இருக்கவே கூடாது என்று விதி வைத்து நீட் தேர்வை நடத்த முடியுமா.. அப்படி நடத்த திராணி இருக்கிறதா #மோடி யின் ஒன்றிய அரசுக்கு…

https://www.facebook.com/savenra/posts/7285276901498170