பலரிடம் ஆதார் இல்லை என்பதால், மது வாங்க ஆதார் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி இன்று தமிழகத்தில் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டாஸ்மாக் கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மது வாங்குபவர்கள் பெயர், முகவரியை குறித்து கொள்ளும் பொருட்டு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
மேலும் வாசிக்க: தமிழக அரசின் டாஸ்மாக் கடை அறிவிப்பால் மக்கள் அச்சம்..
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் முறையீடு செய்துள்ளது.
அதில், ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பலரும் ஆதார் இல்லாமல் வருகின்றார்கள். இதனால் அதிகமான கூட்டம் கூடுகின்றது. எனவே, மது வாங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை வருகிற 14ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: தமிழக அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள் சங்கம்
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 150 கோடியை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல கர்நாடகாவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாள் மது விற்பனையானது 45 கோடியை எட்டியதாக கர்நாடக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.