அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு M.K.Stalin அவர்களுக்கு வணக்கம் என குறிபிட்டு #pmk பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் Dr.S.Ramadoss எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தோன்றிய சந்தேகத்தின் சாரமே இந்த கட்டுரை ..
இதில் மருத்துவர் சொன்ன முக்கிய விடயங்களை // 1,2,3,4,5 // என பிரிக்கப்பட்டு அதன் பின் கேள்வியாக நமது வாதங்கள் தொடுக்கபட்டுள்ளது.
1) //தீர்ப்பில், வன்னியர்களுக்கான தனி இடஓதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருப்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பது தான்.//
இதனை படிக்கும் போது சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரம் இல்லாமல் உள் ஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது என்பதனை மருத்துவர் முழுமையாக புரிந்து கொண்டதாக கருத வேண்டியுள்ளது..
உடனே இங்கு #முஸ்லிம் மற்றும் #அருந்ததியர் உள் ஒதுக்கீடு பற்றி பேசினால் அது பிரோஜனம் இல்லை.. காரணம் அவைகள் இரண்டும் பத்து வருடத்திற்கு ஒரு முறை கணக்கெடுப்பில் சரிபார்த்து நடத்தி வரும் சரியான புள்ளிவிவரம்..
சுதந்திரம் அடைந்த பின் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.. அப்படி எந்த தரவுகள் இல்லாமல் எந்த அடிப்படையில் 10.5 இட ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலே தராமல் உள் ஓதுக்கீடு தருவது சாத்தியமே இல்லை என்பதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா…
2) // உச்சநீதிமன்றத்தில், வன்னியர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, அதில் சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகள், இரண்டாம் தொகுதி பணிகள், நீதிபதி பணிகள் உள்ளிட்டவற்றிலும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக வெளியிட தாங்கள் ஆணையிட வேண்டும் //
இந்த கோரிக்கையானது சாதி வாரி கணெக்கெடுப்பின் புள்ளி விவரமும் செய்யப்பட்டால் மட்டுமே 💯 % முழுமை பெறும் என்பதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
3) //தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் வன்னியர்கள் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.//
இந்த உண்மையை மருத்துவர் அய்யா கோரிய பாயிண்டு (2) உடன் சாதி வாரி கணெக்கெடுப்பின் புள்ளி விவரமும் செய்யப்பட்டால் ..அப்படி பெறப்படும் புள்ளி விவரம் வன்னிய சமூகத்துக்கும் பலன் தரும் பிற பிற்படுத்தபடட சமுகத்துக்கும் அவைகள் பலன் தந்து முழுமை பெறும் என்பதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
4) //1969ஆம் ஆண்டு கலைஞர் அரசால் அமைக்கப் பட்ட சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூகநீதி கிடைத்துள்ளதா? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பரிந்துரை பின்பற்றப்படவில்லை.//
இப்படி சொல்வதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தன்னை அறியாமலே சேம் சைட் கோல் தான் போட்டு விட்டதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
5) //1989ஆம் ஆண்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தொகுத்து வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அதன் மூலம் சமூகநீதி தழைப்பதை உறுதி செய்ய வேண்டும்.//
ஆங்கிகத்தில் supplement answers to the main questions என்பார்கள் இவைகளை .. where as answer to main question is only caste-wise census என்பதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என முதலவருக்கு அனுப்பிய கடிததத்தில் கோரியவர் ஏன் கடைசி வரை நீதிமன்றம் கேட்ட சாதிவாரிய கணெக்கெடுப்பை கோரவே இல்லை என்பதை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
மேலும் #அதிமுக அரசு அமைக்க முற்பட்ட சாதிவாரிய கணக்கெடுப்பை வாரியதை ஏன் எதிர்த்திட வேண்டும் என்பதை தம்மை போலவே தமிழ் நாட்டில் இருக்கும் மிதமுள்ள பிற்படுத்தபட்ட வகுப்பினை சேர்ந்த 3.5 கோடி இந்து மக்களும் கேள்வியாக கேக்காமல் எப்படி அமைதியாக இருப்பார்கள் எனபதனை அறியாதவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இருக்க முடியுமா..
ஆக உயர்நீதிமன்றம் கூறியபடி ஜாதிவாரியாக கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் எடுக்காமல் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு செல்லும் என்றால் அங்கு உள் ஒதுக்கீட்டில் அது தோற்கும் என்பதே காலத்தின் தீர்ப்பாகவும் அமையும்..