பீகார் அருகே இந்திய- நேபாள எல்லையில் உள்ள இந்தியர்கள் மீது நேபாள ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் கொல்லப்பட்டார், 2 பேர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை பிடித்து வைத்துள்ளது நேபாள காவல்துறை.

இந்தியா- நேபாளம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேபாளம் எல்லையில் அதிக அளவில் போலீசாரை குவித்து வருகிறது அந்நாட்டு அரசு. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திற்கு சொந்தமான பகுதிகளான லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் வாசிக்க: சீனா, இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது இந்தியா வைரஸ்- நேபாள பிரதமர் ஒலி

இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லை பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், பீகார் மாநிலம் சோனாவர்சாவில் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள லல்பாண்டியில் இன்று (ஜூன்.12) துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

நேபாள போலீஸ் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 25 வயதான விகேஸ் குமார் ராய் என்பவர் பலியானார். மேலும் உமேஷ் ராம் மற்றும் உதய் தாக்கூர் இருவரும் மோசமாக காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். லகான் ராய் என்பவரை நேபாளம் போலீசார் கைது செய்துள்ளது.

[su_image_carousel source=”media: 14771,14772″ crop=”2:1″ autoplay=”2″ image_size=”medium”]

இதுகுறித்து சர்லாஹி எல்லையில் நாராயன்பூரில் உள்ள நேபாளத்தின் ஆயுத போலீஸ் படை (ABF) பணியாளர்கள் கூறுகையில், இந்திய நாட்டினர் ஒரு குழு பலவந்தமாக எல்லைப் புள்ளி வழியாக நேபாளத்திற்குள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்ததாக கூறியுள்ளார்கள்.

மேலும் வாசிக்க: டிஜிட்டல் மூலம் நாங்கள் பிரசாரம் செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. அமித்ஷா

முன்னதாக கடந்த மே 17ம் தேதி நேபாளம் இந்திய எல்லையில், இந்தியாவில் இருந்து நேபாளம் வரும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும் நேபாளத்தில் கொரோனா பரவ இந்தியர்கள் தான் காரணம் என்று நேபாளம் அரசு தெரிவித்தது. இதனிடையே தற்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு எல்லையில் உள்ள இந்திய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் சொந்தம் கொண்டாடும் அந்த மூன்று பகுதிகளும் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அனைவருக்கும் இந்திய வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.