கனடா நாடு முழுவதும் உள்ள அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார், அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
ட்ரூடோ, அரசு மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ஒரு ஒப்பந்தம் கொண்டுவந்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் இது.
அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை மாதத்திற்கு 1,800 டாலருக்கும் குறைவாக இருக்க கூடாது என்னும் வகையில், இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் இது, 1,35,963 ரூபாய் அளவுக்கானது.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறியது, “இந்த நாட்டை வழிநடத்த நீங்கள் உங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து செயல்படுகிறீர்கள், ஆனாலும், குறைந்த ஊதியத்தை சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் உயர்வுக்கு தகுதியானவர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க: சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா வீரர்களிடையே மோதலால் பதற்றம்
கனடாவின் மிகப் பெரிய சுகாதாரப் பாதுகாப்பு சங்கம், சுமார் 60,000 தொழிலாளர்களை கொண்டது. கோவிட் -19 பிரச்சினையால், தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் இறந்துவிட்டதாகவும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. ஆனால் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என்று SEIU ஹெல்த்கேர் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட் கூறியுள்ளார்.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிமுகம் செய்துள்ள கனடா பிரதமரின் உத்தரவு பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நாடுகளுக்கு மத்தியில், கனடா முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.