மகளிரணி தலைமை நிர்வாகி ராஜேஸ்வரி பிரியாவை தொடர்ந்து பாமக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்பில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகியுள்ளார். பாமகவில் நடிகர் ரஞ்சித் துணை தலைவராக பதவி வகித்து வந்தார்.
 
கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கோவையில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஞ்சித் கூறினார்.
 
அதனை தொடர்ந்து பேசிய நடிகர் ரஞ்சித் கூறிய விவரம் ” அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பல்லேறு தரப்பினரிடம் கலந்து பேசி பாமகவில் இருந்து விலகும் முடிவை நான் எடுத்துள்ளேன். மேலும்
இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது என அவர் தெரிவித்தார்.
 
விவசாயிகளை ஒரு நொடி பொழுதாவது பாமக நினைத்து பார்த்ததா என்றும்.,
 
ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் மதுக்கடைக்கு எதிராக பேசிவிட்டு எப்படி கூச்சமே இல்லமால் மது விற்பவர்களிடம் கூட்டணி சேரலாம் என்றும்  அவர் வினவியுள்ளார்.
 
அதிமுகவினரை கீழ்த்தரமாக பாமக விமர்சித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து பாமக விலகி விடும் என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி நிர்வாகிகளிடம் பாமக ஆலோசிக்கவில்லை என்று நடிகர் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
 
பாமக-அதிமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்கவில்லை. 4 பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.
 
முன்னதாக அதிமுக-பாமக மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை பாமக முக்கியமாக சமூக வலைதளத்தில் சந்தித்து வருகிறது .மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அன்புமணி பாதியிலே ஒடவேண்டிய பரிதாப நிலையும் ஏற்ப்பட்டதும் குறிப்பிடதக்கது ..