தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ராஜ்யசபா எம்பி பதவியை கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா செய்துள்ளது, மாநிலங்களவையில் அதிமுக தனது பலத்தை இழக்கும் என்று கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜிகே வாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் அதிமுக சார்பில் போட்டியிட்டனர். இந்நிலையில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட முனுசாமியும், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர்.
தற்போது இருவரும் ராஜ்யசபா எம்பிக்களாவும் உள்ளதால், இவர்கள் எந்த பதவியில் நீடிப்பர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இருவரும் ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
அதிமுகவின் தவறால் ராஜ்யசபாவில் மெஜராட்டி பலம் பெறும் திமுக:
தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்களில் எண்ணிக்கை 18 ஆகும். இதை தனது 10 ஆண்டு ஆட்சியின் மூலம் மெஜராட்டியாக தக்க வைத்து இருந்த அதிமுகவின் நிலை தற்போது என்ன என்பதை பார்ப்போம்.
ஏற்கனவே ஒரு அதிமுக எம்பி மார்ச் 2021ல் இறந்ததைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி 10 மே 2021 ராஜினமா செய்துள்ளதால், 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகியுள்ளது.
இனி நடைபெற போகும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவின் 3 இடங்களில், 2ஐ திமுக கைபற்றுவது உறுதி என்பதால், திமுக தனது கணக்கை 9 ஆக உயர்த்தி அது மெஜாரிட்டியாக உயரும். அதன் கூட்டணி கட்சி மதிமுக உடன் சேர்த்தால் ராஜ்யசபாவில் திமுக பலம் 10 ஆக தற்போது இருக்கும்.
அதேபோல் ராஜ்யசபா தேர்தலில் 3ல் ஒன்று அதிமுக வென்றால், அதன் எண்ணிக்கை 6 ஆக குறைந்துவிடும். அதன் கூட்டணி கட்சி பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உடன் சேர்த்தால், அதிமுக கூட்டணி 8 ஆக இருக்கும்.
மேலும் 29/6/2022 அன்று அதிமுகவின் 3 மற்றும் திமுக 2 என மொத்தமாக 5 ராஜ்யசபா இடங்கள் காலியாகும். இந்த 5 இடங்களில் நடைபெறும் தேர்தலில் திமுக 4 இடங்களை சுலபமாக கைபற்றும் என்றும், அதிமுகவுக்கு ஓன்று மட்டுமே கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
இது நடைபெறுகிற வேளையில் திமுக கூட்டணி கட்சியின் பலம் 12 ஆக உயரும். ஆனால் அதிமுக கூட்டணி கட்சியின் பலம் 6 ஆக சுருங்கி அதிமுக 4 எம்பிக்களை மட்டுமே ராஜ்யசபாவில் வைத்து இருக்கும். அதிமுகவின் வைத்திலிங்கம் பதவி காலம் 29/6/22 உடன் முடிகிறது. இன்னும் 13 மாதமே இருக்கும் பதவியை அவர் ராஜினாமா செய்தது சரிதான்.
ஆனால் இன்னும் 4 வருடம் 3 மாதம் இருக்கும் எம்பி பதவியை முனுசாமி ராஜினாமா செய்துள்ளது இமலாய தவறு. மொத்தத்தில் அதிமுகவுக்கு 2025 வரை இருக்க வேண்டிய ஒரு எம்பியை திமுகவுக்கு தாரை வார்த்து விட்டது அதிமுக தலைமை என்று பல்வேறு அரசியல் நோக்கர்களும் விமர்சித்துள்ளனர்.
காரணம் 2021 தேர்தலில் ஆட்சியை கைபற்றி விடுவோம் என்ற நம்பிக்கையில் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரை தேர்தலில் நிற்க வைத்து அதிமுகவின் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி எடுத்த முடிவு தவறு என்றும்,
முனிசாமி ஏன் எம்பி பதவியை தக்க வைத்து விட்டு, அவர் நின்ற சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அதிமுகவால் ஜெயிக்க முடியாத நிலை தான் உள்ளதா என அதிமுகவினரே கேள்வி கேட்பதால் வரும் சர்ச்சைகளுக்கு அதிமுகவின் இரட்டை தலைமையான பழனிசாமியும், பன்னீர் செல்வமும் என்ன பதில் தரப்போகிறார்கள்…