தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை இப்போதுதான் தமிழகத்தில் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த வாரங்களில் கொஞ்சம் குறைவாக கேஸ்கள் பதிவான நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று (மே 11) மட்டும் 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 298 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தினசரி பலி எண்ணிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16,178 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,182 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 12,60,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,49,717 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,38,53,216 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 404733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் 2650 பேருக்கும், செங்கல்பட்டில் 2419 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கங்கையில் மிதக்கும் 100க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள்; மாறிமாறி குற்றம்சாட்டும் பீகார்- உ.பி. அரசுகள்