வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தமிழ்நாட்டின் ரயில்வே நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கில் வேலைக்காக இளம் வட இந்தியர்களை இப்போதெல்லாம் தினமும் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் ஈரோட்டில் காவல்துறையினரை வட இந்தியர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட இந்தியர்களை தமிழ்நாடு போலீஸ் சுட்டுக் கொன்றதும் நடந்தது.

திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளால் நடைபெற்ற தொடர் காட்சிகளால் பல வளங்களை பெற்றது தமிழ்நாடு என்பது கண்கூடு. இதனால் வேலை தேடி ஹிந்தி பேசும் மக்கள் தமிழ்நாடு நோக்கி வருவது அதிகரித்துள்ளது.

முக்கியமாக மோடி பிரதமரான பின் வேலைவாய்ப்பினை இழந்த இந்தி பேசும் வட இந்திய மக்கள் தமிழ்நாடு நோக்கி புற்றீசலாக வந்தவண்ணம் உள்ளனர். இவர்களுக்கு கடவுசீட்டு என்பது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சொல்வதுபோல் செய்தால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராக அமைந்துவிடும்.

சட்டத்தின்படி ஆட்சி செய்வேன் என உறுதிமொழி ஏற்ற திமுக அரசு அவ்வாறாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் செய்துவிட முடியாது. ஆனாலும் வேலை தேடி வரும் இந்தி பேசும் வட இந்திய மக்கள் ஊடுருவல் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் தான்.

இதனை எவ்வாறாக கண்காணிப்பது என்பதும்.. அவ்வாறு வருபவர்கள் செய்யும் குற்றச் செயலுக்கு அவர்கள் போலீஸ் காவல் மற்றும் சிறை தண்டனை மற்றும் ஜாமீன் வாங்கி ஓடிவிட்டால் அதன்மூலம் ஏற்படும் சட்ட சிக்கல்..

இவை அனைத்தும் ஒருங்கே தீர்வு ஏற்பட தமிழ்நாடு அரசு நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தி வலுவான சட்டத்தை ஏற்றிட வேண்டும்..

படித்த நம் தமிழ்நாடு மக்கள் அமெரிக்கா ஐரோப்பா வேலைவாய்ப்புக்கு செல்வதுபோல, பாவம் படிக்காத வட இந்திய ஹிந்தி பேசும் மக்கள் தமிழ்நாடு நோக்கி வருகிறார்கள். டிஜிட்டல் உலகில் மாறிவரும் காலத்தின் கட்டாயம் இது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பிணி மனைவியை காட்டுக்கு அனுப்பிய கணவனை கொண்டாடும் வட இந்திய ஜெய்ஸ்ரீராம் கூட்டம் பாஜக ஆட்சியில் சாதித்தது எதுவும் இல்லை., இப்போது வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருவதைத் தவிர..

இதனை ஒன்றிய அரசு உணர்ந்துகொண்டு இனிமேலாவது மதத்தின் பெயரில் வட இந்திய மக்களை மடையர்கள் ஆக்காமல், அவர்களுக்கு திராவிட மாடல் #பெரியார் சீர்திருத்த கருத்துக்களை அண்ணா எழுத்துக்களை ஹிந்தியில் மொழி பெயர்த்து..

இங்கு சென்னை தி.நகரில் ஆறு ஏக்கரில் பாஜக அலுவலகம் அருகே இருக்கும் ஹிந்தி பிரச்சார சபாவை பெரியார் சீர்திருத்தம் செய்யும் பள்ளியாக மாற்றும் முயற்சியை மற்றும் அதற்கான நடவடிக்கைகளையும் மாநில கல்வி அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்..

இன்றைக்கு இது சாதாரண பிரச்சினையாக இருக்கலாம்.. நாளை மதரீதியாக உணர்ச்சிவசப்படும் இந்தி பேசும் வட இந்திய மக்கள் தொகை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்றால் அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக் கூடும்..

பொருளாதாரத்தை மேம்படுத்துவது ராமராஜ்யங்கள் அல்லவே.. காரணம் ராமரே ராமர் மாடல் தோல்வியுற்றதால் தான் அவர் வாழும் காலத்திலேயே அவர் சரயூ நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என ராமாயணம் சொல்வதை நாமும் படித்ததை மறந்து விடலாகாது..

மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இப்போது இருக்கிறது, காரணம் இதுவரை இல்லாத விதமாக அதிக அளவில் வளர்ச்சியில் முன்னேறி வரும் தமிழ்நாடு எனும் வாசம் வீசும் பூக்களை நோக்கி.. ஹிந்தி பேசும் தேனீக்களாக வட இந்திய மக்கள்..
Time to plan a strategy ..Time to teach north indians progressive thoughts of periyar using hindi prachcar sabha in tamilnadu

சமூக வலைதளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/8207254645967053