சுஷீல் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவியின் தாயார் கொடுத்த புகாரில், பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் 2 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூன் 16 ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

[su_image_carousel source=”media: 26129,26128″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. சிபிசிஐடி நடத்திய விசாரணையில் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சிவசங்கர் பாபா வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் 2 வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் அளித்த புகாரிலும் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சமீபத்தில் சிவசங்கர் பாபா அளித்த ஜாமீன் மனுவில், “தான் ஒரு ஆண்மையற்றவர் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் சிவசங்கர் பாபா ஆன்மீகப் பணிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு திருமணமாகி மகன், மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.. எஸ்வி.சேகர் மீது நீதிமன்றம் கடும் தாக்கு