இயக்குநா் காா்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “பேட்ட”. இப்படம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன், சனாத் ரெட்டி, மேகா ஆகாஷ், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளாா்.

இப்படத்தின் மரண மாஸ் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இப்பாடலை ரஜினியின் ரசிகா்கள் சமூக வலைதளங்களில் பகிா்ந்து வருகின்றனா். அனிருத் இசை மரண மாஸாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியின் பழைய படங்களில் வரும் ஓபனிங் பாடல் போலவே அமைந்திருக்கிறது பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் என்று கூறிவருகின்றனர்.

பாடலின் சில வரிகள்., தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
திமிராம வாங்க பல்பாய்டுவீங்க…
மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க…
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்…

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வருகின்ற 9ம் தேதி வெளியாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் இளமையான புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுயுள்ளனர். இதனையும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

முன்னதாக மாலை 5.30 மணிக்கே மரண மாஸ் லிரிக்கல் வீடியோ சன்நெக்ஸ்ட் ஆப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் யூ டியூப் வீடியோவை வெளியிடும் முன்பு தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.