சென்னை தி.நகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. அதன் தலைவர் வேதாந்தம்.
 
இவரின் பாதுகாப்பு அதிகாரியாக சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ சேகர் (47) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். காலையில் பணிக்கு வந்து விட்டு இரவில் சேகர் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
 
விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கென்று தனி அறை உள்ளது.
 
இந்நிலையில் அந்த அறையில் மாலை சுமார் 5 மணியளவில் திடீரென தூப்பாக்கி சத்தம் கேட்டது
 
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் ஓடிவந்தனர். பாதுகாப்பு அதிகாரி சேகர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்தச் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தி.நகர் துணைகமிஷனர் ஹரிகிரன் பிரசாத், மாம்பலம் உதவிகமிஷனர் கலியன் மற்றும் மாம்பலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
 
பின்னர் சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, எஸ்.ஐ சேகரின் சடலத்தின் அருகில் கிடந்த பிஸ்டல் ரக துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
 
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “மரணம் அடைந்த எஸ்.ஐ சேகரின் சொந்த ஊர் வேலுார் மாவட்டம், காட்பாடி, வண்டாரதுங்கல் கிராமம். 
[su_spacer size=”30″]

1994-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராகப் பணியில் சேர்ந்த சேகர் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது

[su_spacer size=”30″]
இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், வசந்த் (13) என்ற மகனும், வாணிஸ்ரீ (14) என்ற மகளும் உள்ளனர். எஸ்.எஸ்.ஐ சேகரின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என  விசாரித்து வருகிறோம்” என்றார்.
[su_spacer size=”30″]

சமூகதளத்தில் வைரலாக பரவும் எஸ்ஐ யின் படம் .. இது கொலையா அல்லது படுகொலையா என விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

[su_spacer size=”30″]
சிறப்பு எஸ்.ஐ-யாகப் பதவி உயர்வு பெற்ற சேகர் ஏன் தீடிர் என தன்னை தானே சுட்டு கொண்டு  தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன .. அதுவும்  பணி புரியும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திலே எப்படி..   என்ற சந்தேகமும் வருவதை தவிர்க்க முடியவில்லை என பெயர் தெரிவ்க்க விரும்பாத காவல் துறை உயர் அதிகாரி நம்மிடம் வருத்ததுடன்  தெரிவித்தார் ..