சூர்யாவின் ‘அருவா’ படத்திற்காக தான் வாங்கும் சம்பளத்தை 25% குறைத்துக்கொள்வதாக ஹரி அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி அடுத்து சூர்யாவை வைத்து அருவா என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக அது துவங்கவில்லை. கொரோனா ஊரடங்கால் சினிமா தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதனால் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தயாரிப்பாளர்களின் துயரை உணர்ந்து, முதல் ஆளாய் நடிகர் விஜய் ஆண்டனி தான் அடுத்து நடிக்கும் மூன்று படங்களில் சம்பளத்தில் இருந்து 25% சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தார். சம்பளத்தில் அவர் சுமார் 1 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: இசைஞானி இளையராஜாவின் பாராட்டு மழையில் லிடியன் நாதஸ்வரம்

இந்நிலையில் இதை பின்பற்றி இயக்குனர் ஹரி தான் அடுத்து இயக்கும் அருவா படத்திற்காக பேசப்பட்டுள்ள சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இது பற்றி ஹரி வெளியிட்டுள்ளார் அறிக்கையில் “வணக்கம்… இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்தஹ் பாதிப்பு அடைந்துள்ளது.

நம்முடைய தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார். ஹரியின் இந்த முடிவிக்கு சினிமா பிரபலங்கள் பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் 30 கோடிக்கு மேல் சம்பளத்தை வாங்கும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பலரும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு சம்பளத்தை குறைப்பார்களா.. என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.