யூடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

யூடியூப் சேனல்கள் சில பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இதுபோன்று செயல்பட்டு வந்த ‘சென்னை டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய்பாபு, கேமரா மேன் அசேன்பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இதேபோன்று ஆபாசக் காணொளிகளைத் தங்கள் யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தவர்கள் தங்கள் காணொளைகளை பிரைவேட் பக்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.

[su_image_carousel source=”media: 21444,21445″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தியில், “பெண்களின் மதிப்பைக் குலைக்கும் வகையிலும் பாலியல் ரீதியிலான உணர்வுகளை தூண்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது.

யூடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமான வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். சைபர் பிரிவு காவல்துறை யூடியூப் பக்கங்களைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

யூட்யூப் மட்டுமல்ல, எந்தவொரு தளத்தை பயன்படுத்தியும் பெண்களுக்கு எதிரான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக எங்களுடைய நடவடிக்கை பாரபட்சமின்றி கடுமையாக இருக்கும். இனி ஆபாசக் காணொளிகளை பதிவிட்டாலோ அல்லது ஏற்கெனவே பதிவிட்டு அதை நீக்காமல் வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி உறுதி- மு.க.ஸ்டாலின்