மது விற்பனை தொடங்கி பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த ‘மம்மி’ தாதா என்று அழைக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் மீது மட்டும், 113 குற்றவழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1980ம் ஆண்டில்உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து, பஸிரன் என்ற பெண், தனது கணவருடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். தெற்கு டெல்லியில், கோவிந்த்புரி பகுதியில் உள்ள நவஜிஜன் என்ற முகாமில் தஞ்சம் அடைந்த அவர் வருவாய்க்கு வழியில்லாததால், சட்டவிரோத மதுபான விற்பனை தொடங்கி, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை என பல்வேறு குற்றச் செயல்களிலும் தன் கணவருடன் சேர்ந்து ஈடுபட்டு வந்தார். இவர்கள் மீது, டெல்லி மாநகரின் பல போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர், தன்னுடைய குற்றம்சாட்டப்பட்ட மகன்களின் உதவியுடன், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். அவர்கள், தாயின் ஆளுமையால் பல குற்றங்களை செய்தனர்’’ என, டெல்லி துணை ஆணையர் ரோம்ல் பானியா தெரிவித்தார். இந்த குடும்பத்தினர் மீது கொலை வழக்குகள் மட்டும் 42 உள்ளன. மேலும், கொலை செய்ய முயற்சி, கடத்தல், ஆயுதம் சட்டம், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, திருட்டு ேபான்ற வழக்குகளும் உள்ளன. இவரது மகன்கள் ஷாலிக் மீது 15 வழக்குகளும், 13 வயதான சிறுவன் மீது 9 வழக்கும், சன்னி கான் மீது 9 வழக்கும், ராகுல் கான் மீது 3 வழக்கும், சல்மான் மீது 2 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 62 வயதான அந்த பெண்ணுக்கு எட்டு மகன்கள் உள்ளனர். இவர்களும், தொழிலே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது தான் இதனால் மொத்தமாக, இந்த குடும்பத்தினர் மீது மட்டும், 113 குற்றவழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2017ம் ஆண்டு, ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பஸிரன், கடந்த ஜனவரியில் ஒரு இயக்கத்தில் சேர்ந்து தலைமறைவாக இருந்தார். கிட்டத்திட்ட இவரது குடும்பமே ஒரு குற்ற குடும்பமாக மாறியதால், டெல்லியில் ‘மம்மி’ தாதா என்றே பஸிரன் அழைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், ‘‘பஸிரன் தன் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க விஹார் பகுதிக்கு வந்த போது, கைது செய்யப்பட்டார்.