பாஜக அரசின் கட்டுபாட்டில் இயங்கும் தேசிய புள்ளிவிவர ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரியல் செக்டார் புள்ளிவிபரங்களின் குழுவினால் தயாரிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் தரவுகளின் வெளியாகி உள்ளன .இந்த புள்ளிவிபர அறிக்கை இணையத்தளத்தில் புள்ளிவிபரம் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை அமலாக்க அமைச்சுகம் வெளியிட்டுள்ளது.

பழைய (2004-05) மற்றும் 2011-12 விலைகளின் அடிப்படையில் புதிய தரவு ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சி விகிதங்களை இந்த அறிக்கை ஒப்பிடுகிறது.2005-06 ஆம் ஆண்டில் இருந்து 2014-15 ஆண்டு வரையிலான புதிய அடிப்படை காலத்தை அடிப்படையாகக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை இது சரிசெய்துள்ளது.

1988-89ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக அதிகமான வளர்ச்சி விகிதம் 10.2% ஆக அதில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பின்னர் பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்தை துவக்கிய பின்னர் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1999 முதல் 4 அரசாங்கங்களின் கீழ் சராசரி வளர்ச்சி விகிதம் ஒப்பிடாக பின் வருமாறு :
1994-2004 பிரதமர் வாஜ்பாயி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி – 5.68%
2004-2009 பிரதமர் மன்மோகம்சிங் தலைமையில் மஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் – 8.36%
2000 – 2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது – 7.68%
2014-2018 தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது – 7.35% (4 ஆண்டுகள்)

வளர்ச்சிக்கு பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சஹர் பி சிதம்பரமும் டுவீட் செய்து உள்ளார்.அதில் அவர்
உண்மை வெற்றி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்தைய தொடர் கணிப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-2014 ஆண்டுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி என்று நிரூபித்துள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்கள் மிகச் சிறந்த தசாப்த கால வளர்ச்சியை வழங்கின; 14 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.பத்து வருடங்களாக அவர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பிற்காக மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என தெர்வித்து உள்ளார்