ராஜீவ் காந்தி குறித்து பொய்யான தகவலை வெறுப்புடன் பேசியதற்கு பதிலடி தரும் வகையில், போர் முடிந்தது.. உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.
 
பிரதமர் மோடி சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை தாக்கி பேசினார்.
 
இதுகுறித்து, பிரதமர் மோடி பேசியதாவது,”உங்களது தந்தை அவரது சேவகர்களால் தூய்மையானவர் என்று குறிப்பிடப்பட்டார். ஆனால், அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாக முடிவுற்றது” என்றார். போபர்ஸ் ஊழலை குறிப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். 
 
ஆனால் டெல்லி நீதிமன்றம் ராஜிவ் காந்தியை  எல்லா குற்றசாட்டுகளிலும் இருந்து விடுவித்தது குறிப்பிடதக்கது 
 
இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டிவிட்டர் பதிவில் “உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது” என்றார்.
 
அந்த டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்ததாவது,”மோடி ஜி, போர் முடிந்துவிட்டது. உங்களுடைய முன்வினைப் பயன் காத்திருக்கிறது. எனது தந்தை குறித்த உங்களுடைய ஆழ்மன நம்பிக்கையை நீங்கள் வெளிப்படுத்துவது உங்களை காப்பாற்றாது. அன்புடன் ராகுல்” என ராகுல் தெரிவித்து உள்ளார்