பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் ட்ரம்ப் இருவரும் Unfollow செய்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..

அமெரிக்க அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான நட்பு உலக அளவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், தற்போது இந்தியாவுடனான நட்பைக் கைவிடுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது போல சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

வெள்ளை மாளிகையால் பின்பற்றப்படும் உலகத் தலைவர் மோடி ஒருவர் மட்டுமே என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெள்ளை மாளிகையின் ஃபாலோயர்ஸ் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்தும் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களை பின்தொடர்வது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பு- எச்சரிக்கும் அமெரிக்கா

ஹைட்ராக்ஸி குளோரோக்வின் விவகாரத்துக்குப்பிறகு இந்திய-அமெரிக்க நட்பு அதிகமாக வெளிப்பட்டது என்று பேசப்பட்டு வந்த நிலையில், ஒரே சமயத்தில் வெள்ளை மாளிகை மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரண்டு ட்விட்டர் கணக்குகளும் பிரதமர் உள்ளிட்ட இந்தியக் கணக்குகளை Unfollw செய்திருப்பது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான பணிகளையும் இந்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் கிடைக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.