கேளிக்கை சினிமா

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ படத்தில் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது. இதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முரளிதரனின் குழந்தைப் பருவம் முதல் அவரதுபந்து வீசும் முறை சர்ச்சையானதில் ஆரம்பித்து அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை இதில் கூறப்பட்டுள்ளது.

800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி பிரபல நடிகர் தந்தை மீது வழக்கு பாய்ந்தது

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.