அமெரிக்க மருந்தக நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. அதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 2ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக Ad26.COV2.S என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்டச் சோதனையில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் தான் 2ம் கட்ட பரிசோதனையை மேற்கொண்ட போது, தன்னார்வலர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளது.

இதையடுத்து கொரோனா மருந்து பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இறுதிக்கட்டப் பரிசோதனையில் சுமார் 60,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் மூன்றாம் கட்டச் சோதனை இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: செல்போன், ரூபாய் நோட்டுகளில் இத்தனை நாட்கள் உயிர் வாழுமா கொரோனா – அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்