சென்னை புழல் சிறையில் நடக்கும் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அதிகாரி சுப்பையாவை கொலை செய்ய கைதிகள் சதித்திட்டம் தீட்டிவருவாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சிறையில் கைதிகள் இடையே நடந்த உரையாடல் குறித்து உளவுப்பிரிவு திடுக்கிடும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மேலும் அறிக்கை கேட்டும் சிறை நிர்வாகத்துக்கு உளவுப்பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது. புழல் சிறை விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையாவை கொல்ல கைதிகள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

சிறைக்குள் கைதிகளின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தியதால் ஆத்திரமடைந்த அக்கைதிகள் சுப்பையாவை கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சிறையை பிரியாணி கடையாக மாற்றியதாக கைதிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இதனால் மேலும் புழல் சிறையில் தொடரும் சோதனையில் டிவி, அரிசி மூட்டை உள்ளிட்டவை அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.