ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய திருப்பமாக, டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

“இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அரசு முடி வெடுத்தது. இதற்காக பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியதாகச் எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தின .

இந்நிலையில், 30 ஆயிரம் கோடியும் டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6,600 கோடி முத லீடு பெறப்பட்டதாக அறிவித்தது. இந்த நிலையில் ரிலை யன்ஸ் குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்டுள்ளது.

ஆனால், 2017-18 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் எதுவும் இல்லை அப்படி என்றால் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்ட பணம் எங்க போனது என்ற கேள்விக்கு டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட் வழக்கு என்ற வரும் போது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிறார்கள்  நிதி துறை வல்லுனர்கள்.

அனில் அம்பானி வாழ்நாளில் ஒரு விமானம் கூட தயாரித்ததில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒப்பந்தம் எற்ப்படுகிற அன்று அனில் அம்பானியின் நிறுவனம் 12 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எற்கனவே உச்ச்நீதிமன்றம் ஒப்பந்த் வழிமுறைகளை மத்திய மோடி அரசிடம் கோரிய நிலையில் இப்போது ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக 2016-2017 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் காட்டபட்டது ஊழல் ஆதாரத்தை மேலும் வெளிச்சம் போட்டு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.