அரசியல் பெண்கள் வாழ்வியல்

பாதிக்கப்பட்ட சென்னை மருத்துவர் 2வருடம் முன்பே கொடுத்த புகாரை கண்டுகொள்ளாத அதிமுக அரசின் காவல் துறை

பொள்ளாச்சி 250க்கு மேற்ப்பட்ட பெண்கள் அதிமுக ஆட்சியில் 7 வருடமாக ,1100க்கும் மேற்ப்பட்ட கூட்டு பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்டும் எந்த நடவடடிக்கை எடுக்காத #அதிமுக அரசின் பயங்கரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
 
கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. ஆனால், போலீசாரோ, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களில் 4 வீடியோ மட்டுமேஇருந்துள்ளதாக தெரிவித்தனர்.
 
இதற்கிடையே செல்போன்களை கைப்பற்றிய போலீசார், அதிலிருந்த தடயங்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அந்த செல்போன்களில் இருந்த வீடியோக்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் இருந்திருக்கலாம் என்றும் அதனாலே, பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்த வீடியோக்களை போலீசார் அழித்ததாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும்
 
இந்த விவகாரத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும், முக்கியமாக திமுகவும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்ததான் போலீசார் வழக்கில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.
 
மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில், செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் (36) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் பார் நாகராஜ் என்பவர், பொள்ளாச்சி 34வது வார்டு ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்துள்ளார்.
 
நாகராஜ், திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர். அமைச்சர் உட்பட முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் இவருக்கு நெருக்கம் உள்ளது. இவரது பேஸ்புக் போட்டோக்களில் அமைச்சருடன் இருக்கும் போட்டோ பிரதானமாக இடம் பெற்றுள்ளது. பார் நாகராஜின் பின்னணியில் மேலும் சில அ.தி.மு.கவினர் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
 
இதை ெதாடர்ந்து பார் நாகராஜை அவசர கதியில் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர். அவரின் பின்னணியில் இருந்த முக்கிய பிரமுகர்கள் யார், பின்னணி என்ன என்ற விவரங்கள் போலிசாரால் மூடி மறைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே அளித்த புகாரை உள்ளூர் போலீசார் விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரை திருநாவுக்கரசு தனது வலையில் வீழ்த்தியுள்ளான். அவரிடம் பேஸ் புக்கில் பெண் என்று கூறி பழகியுள்ளான்.
 
அவரிடம் பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பதுபோல கேட்டுள்ளான். பின்னர் செக்ஸ் பற்றி சந்தேகம் கேட்டுள்ளான். ேமலும் லெஸ்பியனாக இருக்கலாமா என்று கேட்டுள்ளான்.
 
இருவரும் மனம் விட்டு பேசுவதுபோல மெசேஜ் அனுப்பிக்கொண்டனர். பேஸ்புக்கில் திருநாவுக்கரசு பேசுவது தெரியாமல், பெண் என்று நினைத்து சென்னை டாக்டரும் ஆபாசமாக பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த மேசேஜை சேகரித்து வைத்திருந்த திருநாவுக்ரசு, தான் ஆண் என்று டாக்டரை மிரட்டத் தொடங்கினான். இந்த மேசேஜை உங்கள் கணவரிடம் காட்டுவேன். உங்களை அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டி பொள்ளாச்சியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து பலவந்தம் செய்து உள்ளான்.
 
அதை வீடியோவாகவும் எடுத்துள்ளான். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி ஒன்றரை கோடி ரூபாய் வரை வாங்கியுள்ளான்.
 
லோக்கல் பொள்ளாச்சியில் பலரும் குற்றம் சாட்டும் ஜெயராமன் மகன் : கோப்பு படம்
இந்த டாக்டரை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளான். ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்வேன் என்று டாக்டர் மிரட்டிய பிறகே அவரை விட்டு விட்டான். இவனது வலையில் டாக்டர்கள் மட்டுமல்லாது, பேராசிரியைகளும், ஆசிரியைகளும் மாட்டியுள்ளனர்.
 
இவர்கள் தங்களது பெயர் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று கூறி தங்களது அடையாளத்தை காட்டாமல் உள்ளதாக பிடிபட்ட குற்றவாளிகள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அதிமுக வின் முக்கிய விஐபி பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் பிரவின் முகுந்தன் இருவரும் facebook deactivate செய்து ஓடியது ஏன் சமூகவலைதளத்தில் வைரலாகும் கேள்வியும் .,
 
இப்போது பொள்ளாச்சி அதிமுக அரசின் பாதுகாப்பு குறித்து பிரச்சனை விஸ்வரூம் எடுத்த காராணத்தினால் இதனையடுத்து முறையான புகார் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட பெண் மருத்துவருக்கு இப்போது போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் ஆளும் கட்சிக்கு மேலும் சங்கடங்கள் வந்துள்ளன ..
 
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.