விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 52 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 52
1. பதிவறை எழுத்தர் – 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900 – 50,400

2. அலுவலக உதவியாளர் – 30
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

3. இரவு காவலர் – 11
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

4. துப்புரவு பணியாளர் – 03
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

வயது வரம்பு: 01.01.2019 தேதிப்படி  18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2019 @ 5.45pm

விண்ணப்பிக்கும் முறை:  தலலலம குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விழுப்புரம் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன்- “தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விழுப்புரம்.” -என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…