கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில், விஐபிக்கள் மற்றும் அவர்களது மகன்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர் பேஸ்புக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பில் இருந்தார்.
 
கடந்த மாதம் 12ம் தேதி உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அந்த மாணவியை அழைத்தார். மாணவி அங்கே வந்ததும், அவரை காரில் ஏற்றிச் சென்றார். சிறிது தூரம் சென்ற பின் நிறுத்தியுள்ளார்.
 
அங்கு நின்று கொண்டிருந்த தனது நண்பர்களான பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (26), சதீஷ் (29), வசந்தகுமார் (29) ஆகியோரை ஏற்றினார். காரில் சபரிராஜன் மாணவியிடம் ஆடையை அகற்ற முயன்று அத்துமீறலில் ஈடுபட்டு, அதை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.
 
அதன்பின்னர், மாணவியை தனது பண்ணை வீட்டிற்கு வர சொல்லியுள்ளார். மறுத்த மாணவியிடம் செல்போனில் இருக்கும் உனது போட்டோக்களை வெப்சைட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மாணவி அழுது கதறிய நிலையில் அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க நகையை பறித்து அவரை காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் அடிக்கடி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.
 
இதுதொடர்பாக மாணவி கடந்த மாதம் 25ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த போலீசார், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கடந்த 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
 
திருநாவுக்கரசு, சபரிராஜன் கும்பலின் வெறி பிடித்த காம வேட்டைகள சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வேதனையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக பிரபல புள்ளி பொள்ளச்சி ஜெயராமன்  மகன்கள் பிரவின் முகுந்தன் இருவரும் facebook deactivate செய்து ஓடியது ஏன் சமூகவலைதளத்தில் கேள்வியும் வைரலாகி வருகிறது.
 
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பவர், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர்.
 
சதீஷ் பொள்ளாச்சியில் துணிக்கடை வைத்துள்ளார். 4 பேரில் சதீசுக்கு மட்டும் திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பேஸ்புக்கில் ‘நட்பு வேண்டுகோள்’ விடுத்து ‘ஏற்கும்’ மாணவிகளின் செல்போன் எண் வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த விஷயத்தில் சபரிராஜன் கில்லாடி என கூறப்படுகிறது. பெண்களை பேச்சில் மயக்கி அழைத்து வருவது இவரது வேலை. மற்றவர்களை தந்னுடன் கூட்டு சேர்த்து
மிரட்டி பணம் பறித்து வாழ்ந்து இருந்துள்ளனர்.
 
ஆனைமலை சின்னப்பம்பாளைத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டை பெண்களை தங்களது ‘பலாத்கார வேட்டைக்கு’ களமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
சபரிராஜன் மாணவிகள், இளம்பெண்களை அந்த வீட்டிற்கு அழைத்து வருவார். மற்றவர்கள் தனி அறையில் பதுங்கி திடீரென புகுந்து மிரட்டி பலாத்காரம் செய்வார்கள்.
 
கதவு ஓட்டை வழியாக இவர்கள் பலாத்கார காட்சிகளை போட்டோ, வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ, போட்டோக்களை காட்டி மீண்டும் மீண்டும் இவர்கள் பெண்களை பலாத்காரத்திற்கு மிரட்டி அழைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
 
இதை காட்டி இவர்கள் பெண்களிடம் நகை, பணமும் பறித்துள்ளனர். கடந்த 5 ஆண்டிற்கு மேலாக இவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை கூட்டு சேர்ந்து நாசமாக்கியுள்ளனர். ‘போட்டோ, வீடியோ’ காட்சி மானம் போய் விடும் என மிரட்டியதால் யாரும் போலீசில் புகார் தரவில்லை என கூறப்படுகிறது. இந்த மிரட்டலை மூலதனமாக்கி பலாத்கார வேட்டையை தொடர்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
 

குற்றம் சட்டப்பட்ட மக ன்களின் தந்தையுடன் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்த படியே ஆதாரம் இல்லமால் குற்றம் சாட்ட கூடாது என் சொன்னது பலத்த கண்டங்களுக்கு ஆளாகி உள்ளது

இதற்கிடையே செல்போன்களை கைப்பற்றிய போலீசார், அதிலிருந்த தடயங்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த செல்போன்களில் இருந்த வீடியோக்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் இருந்திருக்கலாம் என்றும் அதனாலே, பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்த வீடியோக்களை போலீசார் அழித்ததாக கூறப்படுகிறது.
 
100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த விவகாரத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்ததான் போலீசார் வழக்கில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.
 
திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கூட்டாக, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பலரை பாலியல் தொல்லை தந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
 
நேற்று காலை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு, கோவை மத்திய சிறையில் உள்ள நான்கு பேரிடம் வழங்கப்பட்டது.
 
இதற்கிடையில், இந்த வழக்கில் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு ஏற்றார்போல, கோவை புறநகர் எஸ்பி பாண்டியராஜன், வழக்கில் 4 பேர் மட்டுமே குற்றவாளிகள். முக்கிய விஐபிக்களுக்கோ, அவர்களது மகன்களுக்ேகா தொடர்பு இல்லை. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேவையில்லை.
 
இது சாதாரண வழக்குதான் என்று பேட்டியளித்தார். நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள இந்த வழக்கை எஸ்பி சர்வ சாதாரணமாக கூறியது பொள்ளாச்சி மக்களை மட்டுமல்ல தமிழக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
போலீசாரின் மெத்தனத்தை கண்டித்து, அரசியல் கட்சிகள் போராட்டதில் குதித்தன. மாணவர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வீடியோவை பார்த்த பொதுமக்கள் கதறி அழுதனர்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர் போல பிரஸ் மீட் நட்த்திய எஸ்.பி பாண்டியரஜன் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களில் 4 வீடியோ மட்டுமேஇருந்துள்ளதாக தெரிவிக்க அவருக்கு பலட்த்த கண்டனம் சமூகவலை தளத்தில் பரவியது .
 
 
தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடுவதாக நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு உத்தரவிட்டது.
 
பின்னர் மாலை 4.30 மணிக்கு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்தார்.
 
இது குறித்து உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையை பிறப்பித்ததோடு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதற்கான கடிதத்தை நேற்றே அனுப்பி வைத்தார். எந்த வழக்கிலும் போலீசார் இவ்வளவு தீவிரத்தை காட்டியதில்லை. தமிழக போலீஸ் வரலாற்றில், இவ்வளவு வேகமாக ஒரு வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி, பின்னர் சிபிஐக்கு மாற்றிய முதல் இந்த வழக்குதான் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கில் தொடர்புடைய விஐபிக்கள் மற்றும் விஐபிக்களின் மகன்கள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.