பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி , ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றும் வெளியிட்டார்.

அதில் மைல்ட் கொரோனாவாக உள்ளது என்றும் மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள கூறினர். ஆனால் குடும்பத்தினரின் நலன் கருதி மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக கூறினார். அவ்வப்போது லேசான காய்ச்சல் மற்றும் சளி மட்டுமே என்றும் தான் நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கவிஞரும் பாடலசிரியருமான வைரமுத்து எஸ்பிபி நலம் பெற வேண்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கவிதை மொழியில் உருகியுள்ளார்.

மேலும் வாசிக்க: ராம் கோபால் வர்மாவின் புதிய படைப்பா.. ‘ARNAB- THE NEWS PROSTITUTE’