பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் திலீப்குமார் 1944 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

[su_image_carousel source=”media: 24986,24987″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

60 ஆண்டுகள் பாலிவுட் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் திலீப் குமார். கல்லூரியில் ராஜ் கபூர் உடன் ஏற்பட்ட நட்பு சினிமா பக்கம் இவரை திருப்பியது. முகமது யூசுப் கான் எனும் தனது பெயரை முதல் படத்திற்காக திலீப் குமார் என மாற்றிக் கொண்டார்.

1944ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

[su_image_carousel source=”media: 24990,24989″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ள நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாகிஸ்தானின் உயரிய விருது என விருதுகளின் மன்னனாக திகழ்ந்தவர் திலீப் குமார்.

திலீப் குமார் மறைவு இந்திய திரையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு. பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகர்கள், நடிகைகள் என பலரும் திலீப் குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யூடியூபர் பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்; மனைவி கிருத்திகா ஆவேசம்!