தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் நவம்பர் 30ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவம்பர் 9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும். 9,10,11,12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் கடிதம் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர்-23 முதல் வகுப்புகள் தொடங்கும்- அண்ணா பல்கலைக்கழகம்