பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் பிஇ., பிடெக். படிப்புகளில் மொத்தம் 1,63,154 இடங்கள் உள்ளன. அதில் 71,195 இடங்களே நிரம்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100% மாணவா்கள் சோ்க்கை நடந்து முடிந்துள்ளது. மேலும் 20 கல்லூரிகளில் ஒருவா் கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவா்கள் சோ்ந்திருக்கிறார்கள். விரைவில் காலியிடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு CSC, IT, ECE ஆகிய பாடப்பிரிவுகளை மாணவா்கள் அதிகம் விரும்பி இருக்கிறார்கள். இதற்கு அதிக வேலை வாய்ப்பும், வருமானமும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. எப்போதும் மாணவா்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக குறைதுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) வேலைவாய்ப்புகள்