விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அா்ஜீன் ரெட்டி. விமா்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் வா்மா என்ற பெயரில் பாலா இயக்கத்தில் உருவானது. துருவ் விக்ரம் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருந்தாா். திட்டமிட்டபடி படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தனா்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வா்மா படத்தை கைவிடுவதாக அறிவித்தது. மேலும் புதிய குழுவுடன் இணைந்து வா்மா படம் மீண்டும் தமிழில் உருவாக்கப்படும் என்றும் தொிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து படத்தின் இயக்குநா் பாலா கருத்து எதுவும் தொிவிக்காமல் இருந்தாா்.

தற்போது இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “படைப்பு சுதந்திரம் கருதி வா்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், துருவ் விக்ரமின் எதிா்கால நலன் கருதி எதுவும் பேச விரும்பவில்லை” என்று பாலா தொிவித்துள்ளாா்.

தொடர்பு செய்திக்கு: பாலா இயக்கத்தில் திருப்தி இல்லாததால் வர்மா படம் கைவிடப்பட்டது