இயக்குனர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் “பக்ரீத்”. இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஒட்டகம் ‘சாலா’ இதில் நடித்துள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார். திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி, ஏ.ஆர். முருகதாஸ், அட்லீ, ஆர்யா, விஷ்ணு விஷால், அனிருத் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

t

ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒட்டகத்தை அதனுடைய இடத்தை விட்டு வேறு இடத்தில் வளர்க்க ஆசைப்படும் ஹீரோ விக்ராந்த். அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்குத் திரும்பக் கொண்டு செல்ல முற்பட்டு என்னென்ன தடைகள் எதிர்கொள்கிறார் என்பதை பக்ரீத் டீசர் காட்டுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், கோலிவுட்டில் அனிமல் ஜானர் படங்கள் அதிகம் வர தொடங்கியுள்ளன. கொரில்லா, மான்ஸ்டர், வாட்ச்மேன் படங்கள் வரிசையில் பக்ரீத் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.