சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இதில் அவருடன், கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ஐரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் படுமிரட்டலாக இருக்கிறது. டிரெய்லரை பார்க்கும் போது, இது ஒரு திகில் படம் என்பது தெளிவாகிறது. நயன்தாரா விளையாட்டுதனமாக செய்யும் ஒரு காரியம் வினையாக முடிகிறது. எனவே ‘நான் ஆரம்பித்ததை நானே முடிக்கிறேன்’ எனக் கூறி பிரச்சினையை முடிக்கிறார்.

இந்நிலையில் தமிழ்த்திரையுலகில் முதல்முறையாக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட படம் ரஜீனியின் ‘கபாலி’. அதேபோல் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ள நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் புரமோஷனுக்காக பிரத்யேகமாக ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேருந்தின் நான்கு பக்கங்களிலும் இந்த படத்தின் புரமோஷன் போஸ்டர்கள் உள்ளன. குறிப்பாக பேருந்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.சி.டி திரையில் இப்படத்தின் டிரைலர் உள்பட மற்ற புரமோஷன் வீடியோக்கள் திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த பஸ் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. கேஜேஆர் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான விளம்பர யுக்தியால் இந்த படம் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதாக தமிழ் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.