இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை, கேரளா என்று பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

மேலும், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.