தமிழ் வினாத்தாளில் குளறுபடி காரணமாக 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இதனை எதிர்த்து மத்திய அரசின் சிபிஎஸ்இ-யின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் இனி வரும் காலங்களில் நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
இந்த முறை தமிழ்நாட்டில் மொழி மாற்றம் தவறு மீண்டும் நடக்கமால் வினாத்தாளை தவறில்லாமல் மொழிபெயர்க்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .