நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் ஏமன் வறுமை மிக்க நாடாக உள்ளது.
 
ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா ஆகும்.
 
நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர். ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
 
 இதற்க்கு காரணம் ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
 
ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று ‘சேவ் தி சில்ரன்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
 
உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.